Tagged under: ,

முதல் மேடைப் பிரவேசம்


இந்த தலைப்பினை படித்தவுடன் பலருக்கும் பலவிதமான கேள்விகள் , அனுமானங்கள் தோன்றக் கூடும் . அனைத்தையும் புரந்த்தள்ளுங்கள் . எதைப் பற்றி இருக்கும் என்ற ஆர்வத்தை மட்டும் தக்க வைத்துக்கொள்ளுங்கள்தற்போது நீங்கள் ஒரு அருமையான சாய்ந்த இளைப்பாறும் இருக்கையில் கிடத்தப்பட்டுல்லிர்கல். உங்கள் கடந்த காலத்தில் குறிப்பாக குழந்தைப் பருவத்தை சென்றடைகிறீர்கள். வாசகர்களுக்கு " ஏண்டா இப்புடி இழுதடிக்குற " என்று தோன்றினால் மன்னிக்கவும்.

தற்சமயம் அனைவரும் தத்தம் அவர்களுடைய குழந்தைப் பருவ நினைவுகளை வருடிக் கொண்டிருப்பிர்கள் . இதைப் பதிவு செய்ய விரும்புவதற்கு முன், இந்த எண்ணம் தோன்றிய தருணத்தில் நானும் உங்களைப் போல் தான் நினைவுகளை வருடிக் கொண்டிருந்தேன் . சிறு வேறுபாடு நான் நினைவு கூர்ந்தது என்னுடைய முதல் மேடைப் பிரவேசத்தை . ஆகையால் , தாங்களும் அந்த நினைவிற்கு சென்றீர்களானால் நான் கூற வருவதை எளிதாக உணர முடியும் ..................................... நன்றி !

தற்போது உங்கள் முகத்தில் புன்முறுவல் பூத்திருக்கும் என்று நம்புகிறேன் . எந்த விதமான பிரவேசமாயினும் அது அவரவர்க்கு உன்னதமானது.
இயக்குனர்கள் " கட் ,பான் டு தி கார்னர் " என்று கூறுவதை போல் அந்த நினைவலைகளில் ஓரமாய் பார்த்தல் இரண்டு உள்ளங்களுக்கு அது நம்மை விட உன்னதமாக இருக்கும் . ஆம் , அது நம் பெற்றோரே . ஒரு சின்ன மாற்றுக்கருத்து , இல்லை ஒரு வேடிக்கையான வினா . அங்கே யார் குழந்தை ????!! புன்னகையுடன் எனது பதில் பெற்றோர்களே  என்பது தான் . காரணம் , அவர்களது வாழ்கையில் அவர்கள் நிகழ்த்திய மேடைப் பிரவேசங்களும் , பலருடயதை பார்த்த அனுபவங்களும் அவர்களுடைய குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் ... இல்லை ஒப்பிட தகுதியே இல்லாததது .இருப்பினும்  உங்களை அவர்கள் இந்த உலகிற்கு அறிமுகப் படுத்தும் ஆர்வம் , உற்சாகம் , சம்பாஷனைகள் அவற்றை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்னிடம் .

உண்மையில் என்னுடைய முதல் மேடை பிரவேசத்தில் நான் என்ன செய்தேன் என்று துளியும் ஞாபகம் இல்லை . ஆனால் , இந்த சிந்தனயை தங்களிடத்தில் நான் பகிர விரும்பிய காரணம் , இல்லை தருணம் , சமீபத்தில் நகரத்தார் ஆண்டு விழாவில் பல குழந்தைகள் நிகழ்த்திய மேடை பிரவேசங்களே . பார்த்து வியக்கும்படி எதுவுமில்லை என்பதால் என்னுடைய பார்வை அலைபாய்ந்தது . அப்படி என் பார்வையில் சிக்கிய காட்சியில் தோன்றிய சிந்தனையை தற்போது பதிவு செய்துள்ளேன் . " காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு " என்ற பொன் மொழியைப் போல் எல்லா பெற்றோர்களுக்கும் அவரவர் குழந்தைகளின் செயல்பாடு உன்னதமானதே . அது எப்புடி இருந்தாலும் அதை ரசிப்பர்


அத்தருணத்தில்  தீர்மானமாய் தோன்றியது , ஒவ்வொருவரின் முதல் மேடைப் பிரவேசம் என்பது அவர்களுடைய குழந்தைகளை மேடை ஏறச் செய்து உலகிற்கு அறிமுகம் செய்வது தான் . என்னுடைய முதல் மேடைப் பிரவேசத்திற்காக ஆவலோடு  காத்திருக்கிறேன் .....                                                                                                                     
 -கரு . பனையப்பன் 





Tagged under: ,

வலைதலவாசிகள் என்கின்ற .....NETIZENS

தற்போதைய இளைஞர்கள் குடிமக்களாக தங்கள் கடமைகளை நிறைவேற்றாவிட்டாலும், வலைதலவாசிகளாக தத்தம் தமது கடமைகளை சரிவர செய்து பல தொலைத்தொடர்பு கம்பெனிகளுக்கு வருவாய் ஈட்டி வருகின்றனர். இதென்ன தேசத்திற்கு இழைத்த துரோகம் போல் பதிவு செய்திருக்கிறானே என்று என்ன வேண்டாம். சற்று ஆணித்தரமாக பதிவு செய்யவே ஆதங்கம் கலந்த வார்த்தைகளோடு பதிவு செய்துள்ளேன்.

சமூக வலைதளங்களின் மூலம் விஷயங்களை பகிரவும் , விட்டுப்போன உறவுகளை புதுப்பிக்கவும் , புதுப்புது உறவுகளை உருவாக்கவும் முடிகிறது. ஆனால் நாம் அச்செயலில்  மட்டுமாஈடுபடுகின்றோம்? என்னையே எடுத்துகாட்டாக வைத்துக் கூறினால், வலைத்தளம் என்ற மாய உலகை அனுபவித்துள்ளேன். அப்பட்டமாக கூறினால் அடிமையாகியுள்ளேன். அது வெறும் மாயத்தோற்றம் என்பதை புரிந்து கொள்ள எனக்கு வெகு நாட்களாகி விட்டது. அடிமைகளாக அனைவரும் மாறி விட்டீர்கள் என்று சொல்லவில்லை . ஆனால் அதனை பயன்படுத்துவதன்  மூலம் நாம் என்னென்ன இழக்கிறோம் என்பதை சிந்தனைக்குள்ளாக்குங்கள் என்றே கூறிகிறேன்.

உளவியல் ரீதியாகவும் சரி , உடல் ரீதியாகவும் சரி நம்மை ஈர்த்து அடிமைபடுத்துகிறது இந்த சாமர்த்திய சாதனம். குறுஞ்செய்தி ஓசையோ அல்லது  உஷ்ச்ஷ்ஷ் என்ற வைப்றேஷனோ உங்கள் கைபேசியில் வந்தவுடன் நீங்கள் என்ன உணர்வீர்கள் என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. உங்களுக்குள் ஒரு வித ரசாயன மாற்றத்தை தோற்றுவித்து தோற்றமில்லாத மனிதர்களுடன் உரையாடச் செய்கிறது. ஒரு கட்டத்தில் மறுமுனையில் உங்களுடன் உரையாட நண்பர்கள் இல்லாத போதும் போலி இன்பங்களினால் இந்த மாய உலகிலேய நம்மை இருக்கும்படி செய்து விடுகிறது.

பொது இடங்கள், சுற்றுலா தளங்கள் என்று எங்கு சென்றாலும் புகைப்படம் எடுத்து அடுத்த கணமே அதை சமூக வலைதளங்களில் பதிவு செய்து, ஸ்மைலி என்னும் பொம்மைகளின் மூலம் வெளிபடுத்தும் உணர்சிகள் உண்மையானதுதானா? நண்பர்களுடன் நேரில் உரையாடுவதை தவிர்த்து குரூப் சாட் எனும் கிணற்றில் தவளைகளை போலத் தானே வாழ்கிறோம்? சமூக வலைதளங்களில் நூற்றுக்கணக்கான நண்பர்கள் இருப்பினும், இந்த மாய உலகம்  இரத்தமும் சதையுமான உயிர்களிடதிளிருந்து நம்மை தனிமை படுத்துகின்றது தானே?


தனிமை தவறல்ல தோழர்களே.  ஆனால், வலைதலங்களினால் ஏற்படும் தனிமையும் அதனால் அழிக்கப்படும் படைப்பாற்றலும்,  தனித்திறமைகளும் தவறுதானே ! நாம் அந்த கையடக்க திரையை பார்த்துக் கொண்டிருப்பதால் இழக்கும் வாய்ப்புகளை உணருவதே இல்லை. நம் கட்டுபாட்டுக்குள் நமது செயல்கள் இருக்க வேண்டுமே தவிர மாய உலகின் கட்டுபாட்டுக்குள் நாம் இருந்துவிடக்கூடாது என்பதே என் தாழ்மையான கருத்து. இன்றைய இளைஞர்களிடமிருந்து விதிவிலக்காக திகழ வேண்டும் என்று இந்த கருத்துக்களை பதிவு செய்ததாக கருத வேண்டாம். நானும் என் சக சமுதாயத்தினரும் சிந்தித்து , உணர்ந்து , ஆராய்ந்து இழந்ததை பெறவே இந்த வலைப்பதிவு
                                                                                                                                                    கரு.பனையப்பன்