இந்த தலைப்பினை படித்தவுடன் பலருக்கும் பலவிதமான கேள்விகள் , அனுமானங்கள் தோன்றக் கூடும் . அனைத்தையும் புரந்த்தள்ளுங்கள் . எதைப் பற்றி இருக்கும் என்ற ஆர்வத்தை மட்டும் தக்க வைத்துக்கொள்ளுங்கள். தற்போது நீங்கள் ஒரு அருமையான சாய்ந்த இளைப்பாறும் இருக்கையில் கிடத்தப்பட்டுல்லிர்கல். உங்கள் கடந்த காலத்தில் குறிப்பாக குழந்தைப் பருவத்தை சென்றடைகிறீர்கள். வாசகர்களுக்கு " ஏண்டா இப்புடி இழுதடிக்குற " என்று தோன்றினால் மன்னிக்கவும்.

தற்போது உங்கள் முகத்தில் புன்முறுவல் பூத்திருக்கும் என்று நம்புகிறேன் . எந்த விதமான பிரவேசமாயினும் அது அவரவர்க்கு உன்னதமானது.
இயக்குனர்கள் " கட் ,பான் டு தி கார்னர் " என்று கூறுவதை போல் அந்த நினைவலைகளில் ஓரமாய் பார்த்தல் இரண்டு உள்ளங்களுக்கு அது நம்மை விட உன்னதமாக இருக்கும் . ஆம் , அது நம் பெற்றோரே . ஒரு சின்ன மாற்றுக்கருத்து , இல்லை ஒரு வேடிக்கையான வினா . அங்கே யார் குழந்தை ????!! புன்னகையுடன் எனது பதில் பெற்றோர்களே என்பது தான் . காரணம் , அவர்களது வாழ்கையில் அவர்கள் நிகழ்த்திய மேடைப் பிரவேசங்களும் , பலருடயதை பார்த்த அனுபவங்களும் அவர்களுடைய குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் ... இல்லை ஒப்பிட தகுதியே இல்லாததது .இருப்பினும் உங்களை அவர்கள் இந்த உலகிற்கு அறிமுகப் படுத்தும் ஆர்வம் , உற்சாகம் , சம்பாஷனைகள் அவற்றை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்னிடம் .
உண்மையில் என்னுடைய முதல் மேடை பிரவேசத்தில் நான் என்ன செய்தேன் என்று துளியும் ஞாபகம் இல்லை . ஆனால் , இந்த சிந்தனயை தங்களிடத்தில் நான் பகிர விரும்பிய காரணம் , இல்லை தருணம் , சமீபத்தில் நகரத்தார் ஆண்டு விழாவில் பல குழந்தைகள் நிகழ்த்திய மேடை பிரவேசங்களே . பார்த்து வியக்கும்படி எதுவுமில்லை என்பதால் என்னுடைய பார்வை அலைபாய்ந்தது . அப்படி என் பார்வையில் சிக்கிய காட்சியில் தோன்றிய சிந்தனையை தற்போது பதிவு செய்துள்ளேன் . " காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு " என்ற பொன் மொழியைப் போல் எல்லா பெற்றோர்களுக்கும் அவரவர் குழந்தைகளின் செயல்பாடு உன்னதமானதே . அது எப்புடி இருந்தாலும் அதை ரசிப்பர் .
அத்தருணத்தில் தீர்மானமாய் தோன்றியது , ஒவ்வொருவரின் முதல் மேடைப் பிரவேசம் என்பது அவர்களுடைய குழந்தைகளை மேடை ஏறச் செய்து உலகிற்கு அறிமுகம் செய்வது தான் . என்னுடைய முதல் மேடைப் பிரவேசத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறேன் .....
-கரு . பனையப்பன்
2 Comment Here:
nice to read:-)
nice experience
Post a Comment