தற்போதைய இளைஞர்கள் குடிமக்களாக தங்கள் கடமைகளை நிறைவேற்றாவிட்டாலும், வலைதலவாசிகளாக தத்தம் தமது கடமைகளை சரிவர செய்து பல தொலைத்தொடர்பு கம்பெனிகளுக்கு வருவாய் ஈட்டி வருகின்றனர். இதென்ன தேசத்திற்கு இழைத்த துரோகம் போல் பதிவு செய்திருக்கிறானே என்று என்ன வேண்டாம். சற்று ஆணித்தரமாக பதிவு செய்யவே ஆதங்கம் கலந்த வார்த்தைகளோடு பதிவு செய்துள்ளேன்.
சமூக வலைதளங்களின் மூலம் விஷயங்களை பகிரவும் , விட்டுப்போன உறவுகளை புதுப்பிக்கவும் , புதுப்புது உறவுகளை உருவாக்கவும் முடிகிறது. ஆனால் நாம் அச்செயலில் மட்டுமாஈடுபடுகின்றோம்? என்னையே எடுத்துகாட்டாக வைத்துக் கூறினால், வலைத்தளம் என்ற மாய உலகை அனுபவித்துள்ளேன். அப்பட்டமாக கூறினால் அடிமையாகியுள்ளேன். அது வெறும் மாயத்தோற்றம் என்பதை புரிந்து கொள்ள எனக்கு வெகு நாட்களாகி விட்டது. அடிமைகளாக அனைவரும் மாறி விட்டீர்கள் என்று சொல்லவில்லை . ஆனால் அதனை பயன்படுத்துவதன் மூலம் நாம் என்னென்ன இழக்கிறோம் என்பதை சிந்தனைக்குள்ளாக்குங்கள் என்றே கூறிகிறேன்.
உளவியல் ரீதியாகவும் சரி , உடல் ரீதியாகவும் சரி நம்மை ஈர்த்து அடிமைபடுத்துகிறது இந்த சாமர்த்திய சாதனம். குறுஞ்செய்தி ஓசையோ அல்லது உஷ்ச்ஷ்ஷ் என்ற வைப்றேஷனோ உங்கள் கைபேசியில் வந்தவுடன் நீங்கள் என்ன உணர்வீர்கள் என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. உங்களுக்குள் ஒரு வித ரசாயன மாற்றத்தை தோற்றுவித்து தோற்றமில்லாத மனிதர்களுடன் உரையாடச் செய்கிறது. ஒரு கட்டத்தில் மறுமுனையில் உங்களுடன் உரையாட நண்பர்கள் இல்லாத போதும் போலி இன்பங்களினால் இந்த மாய உலகிலேய நம்மை இருக்கும்படி செய்து விடுகிறது.
பொது இடங்கள், சுற்றுலா தளங்கள் என்று எங்கு சென்றாலும் புகைப்படம் எடுத்து அடுத்த கணமே அதை சமூக வலைதளங்களில் பதிவு செய்து, ஸ்மைலி என்னும் பொம்மைகளின் மூலம் வெளிபடுத்தும் உணர்சிகள் உண்மையானதுதானா? நண்பர்களுடன் நேரில் உரையாடுவதை தவிர்த்து குரூப் சாட் எனும் கிணற்றில் தவளைகளை போலத் தானே வாழ்கிறோம்? சமூக வலைதளங்களில் நூற்றுக்கணக்கான நண்பர்கள் இருப்பினும், இந்த மாய உலகம் இரத்தமும் சதையுமான உயிர்களிடதிளிருந்து நம்மை தனிமை படுத்துகின்றது தானே?
தனிமை தவறல்ல தோழர்களே. ஆனால், வலைதலங்களினால் ஏற்படும் தனிமையும் அதனால் அழிக்கப்படும் படைப்பாற்றலும், தனித்திறமைகளும் தவறுதானே ! நாம் அந்த கையடக்க திரையை பார்த்துக் கொண்டிருப்பதால் இழக்கும் வாய்ப்புகளை உணருவதே இல்லை. நம் கட்டுபாட்டுக்குள் நமது செயல்கள் இருக்க வேண்டுமே தவிர மாய உலகின் கட்டுபாட்டுக்குள் நாம் இருந்துவிடக்கூடாது என்பதே என் தாழ்மையான கருத்து. இன்றைய இளைஞர்களிடமிருந்து விதிவிலக்காக திகழ வேண்டும் என்று இந்த கருத்துக்களை பதிவு செய்ததாக கருத வேண்டாம். நானும் என் சக சமுதாயத்தினரும் சிந்தித்து , உணர்ந்து , ஆராய்ந்து இழந்ததை பெறவே இந்த வலைப்பதிவு.
கரு.பனையப்பன்
3 Comment Here:
arumai... sinthikka koodiya ondru.. seyalpadavum ninaika thoondum ondru.. ninaipathu nijamavathu kaalathin kayil
Arputham panai...ennudaiya karuthu maarum enbathu kaalathin kayil alla..elaingergalin kayil ullathu..self control vendum..namakul uruthi vendum.samooga valaithalathil pidiyil iruka kudathu endra ennam kolgai vendum..nandri panay enakul irukum sindhanai thoondi vittatharku
nejathil nadapavaigal ezuthagi ullana endru thaan solla vendum.anal enda unarvu enul eduvarai erundhathelai.anal en thoziyar edayae edanai nan kandulen.uyirulla manithargalai uyiratra kaipesiyel adaki,adil natpu kolvathe endraya thalai muraiyel perugi varugiradhu.. evai mara vendum,, matra vendum..
Post a Comment