சமுதாயத்தின் வளர்ச்சி என்பது ஒரு சுழற்சியாகவே உள்ளது. காரணம் வாழ்கை ஒரு வட்டம். ஆனால், நாம் அந்த வட்டத்தில் முன்னேறிக் கொண்டே இருக்கிறோம். சமீபத்தில் நடக்கும் அல்லது நடந்துவிட்டிருந்த சம்பவங்கள் என்னுள் பல கேள்விகளை எழுப்பி விட்டன. விடையறிய என் எண்ணங்களை வலைப்பதிவின் மூலம் உங்களோடு இணைக்கின்றேன்.
வளர்ந்து வரும் சமுதாயம் என்று நான் கருதுவது இளைஞர் சமுதாயம். அதே போல் சமுதாயத்தின் வளர்ச்சியும் இளைஞர்களை சார்ந்தே உள்ளது. எங்கும் எதிலும் கூட்டு முயற்சியே பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை ஆணித்தரமாக நம்புபவன் நான். இளைஞர் சமுதாயத்தில் கூட்டு முயற்சிக்கு அஸ்திவாரமாய் இருப்பது நட்புறவு. அனால், அந்த உண்மையான நட்புறவு இன்றைய இளைஞர்களிடம் இல்லையே என்ற ஐயம் என்னுள் ஏற்பட்டுள்ளது.
நட்பு என்பதன் தர்க்க ரீதியான பொருளை இளைஞர் சமுதாயம் உணராததற்கு கரணம் என்னவாக இருக்க கூடும்? பணமும் சுயநலமும் அதனால் விளையும் எந்திர வாழ்கையா? அல்லது போட்டி பொறாமைகள் நிறைந்த சமுதாயத்தின் சந்தர்ப்ப சூழ்நிலைகளா? அல்லது கண்டிப்பின்றி பெற்றோர்களுக்கு ஒரே பிள்ளையாக வளருவதாலா? காரணம் கண்டறிய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபட்டுளோம். இந்த நிலைமை இவ்வாறு நீடிக்குமெனில் வரவிருக்கும் சமுதாயத்தின் நிலைமையை எண்ணும் போது சற்றே நிலை குலையச் செய்கிறது என்னை.
தோழர்களே உரையாடுங்கள் உங்கள் மனசாட்சியிடம். ஒரு புரிதலை ஏற்படுத்துங்கள், நாம் எங்கே நிற்கிறோம் என்று. எண்ணங்களை பகிருங்கள், உங்கள் நண்பர்களிடமும் குடும்பத்தினருடனும். நம்மால் முடிந்த ஆனால் இதுவரை செய்திடாத காரியங்கள் நிறைய இருக்கிறது. ஒன்று சேருவோம்! கை கோர்ப்போம்! புதிய விடியலுக்காக.....

- கரு. பனையப்பன்
4 Comment Here:
Ya true One :)
natppu enbadarkana porul puriyamaikana karanan thedamal porumlai vilakum muyarchil irangalame!
நிச்சயமாக .. என்னுடைய கேள்விகளை நீ உணர்ந்து அதுக்கான மாற்றங்களை நீ உணர்ந்தேயானால் அதுவே முதல் படி ஆகும்
Unakana pathil un kelvi elaiyae eruku !!! Enthira vazhkai,suyanalam
Post a Comment